சிந்தனைகள்

1. நம் மன ஆர்வங்கள் எப்படியோ.? அப்படியே.. நம் அபிப்பிராயங்களும் இருக்கும்.

2. மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.

3. சலிப்பில்லாதவன் நிச்சயம் வெற்றியடைவான்.

4. உடல் ஆரோக்கியத்தில் எண்ணங்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது.. எப்போதும் நல்லதையே நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கத்தை பழக்கமாக கொண்டிருங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

5. தாகத்திற்கு முன்பே கிணற்றைத் தோண்டு.

6. காதால் உபதேசம் கேட்பினும், கருத்தால் நம்பிக்கை உண்டாகவிடின் கடுகளவு நன்மையும் உண்டாகாது.

7. நல்ல ஆலோசனையை விரும்பிக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்.

8. நேர்மையான வழியில் அடைய முடியாத ஒன்றை ஒருநாளும் தவறான வழியில் அடைய முடியாது.

9. ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும் இடைவெளி அதிகம் இருந்தால் அவன் வாழத் தெரியாதவன்.. இரண்டும் ஒன்றியிருந்தால் அவன் வாழ்கிற மனிதன்.

10. சமூகத்தை ஒன்றாகப் பிணைக்கும் சங்கிலி கருணை.

11. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எந்தவொரு நொடியிலும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

12. அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும்.. நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.

13. எல்லாச் சமயங்களுக்கும் நோக்கம் ஒன்றுதான் விளக்க முடியாததை ஏற்றுக்கொள்ள செய்வதே அந்த நோக்கம்.

14. மனிதன் தன்னிடத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்து செயலில் ஈடுபடும் பொழுது அவனால் சாதிக்க முடியாத செயல் எதுவுமே இருக்காது.

15. கடிந்து கொண்ட பின் தட்டிக்கொடுத்து என்பது மழை நின்றபின் வரும் வெயில் போல இதமானது.

16. மோசமான பெண்.. மோசமான ஆணை விட மிகவும் மோசமானவள்.

17. ஆறாத துயரத்தை போக்க வல்லது காலம்.

18. அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சி உடையவன்.

19. செயல் பெரிதோ சிறிதோ நம்மால் செய்யக் கூடியவற்றை சலிப்பின்றி செய்பவரே போற்றுவதற்கு உரியவர்.

20. வேலை செய்வதில் அவசரமும் கூடாது.. இடையில் இளைப்பாறுவதும் கூடாது.

Comments are closed.