சிந்தனை கவிதைகள்

நம்பிக்கை வெற்றியோடு வரும்
ஆனால் வெற்றி நம்பிக்கை
இருப்பவனிடம் மட்டும்
தான் வரும்.

இல்லாததை நினைத்து
ஏங்குவதை விட்டு விட்டு
இருப்பதை வைத்து
திருப்தியாக வாழக் கற்றுக்
கொள்ளவேண்டும்.

எத்தனை தடைகள் என்று
நினைத்து வருந்தாதீர்கள்
உள்ளத்தில் உள்ள
நம்பிக்கை தான் தடைகளை
உடைத்து வெற்றியை
தேடித் தருகின்றது.

நேற்று செய்ய வேண்டியதை
இன்று செய்தால் நீ
சோம்பேறி…! இன்று
செய்ய வேண்டியதை
இன்றே செய்தால்
நீ சுறு சுறுப்பானவன்..!
நாளை செய்ய
வேண்டியதை இன்று
செய்தால் நீ தான்
வெற்றியாளர்…!

ஒருவனை மனிதனாக
மாற்றுவது அவனுக்கு
கிடைக்கும் வசதிகளும்
உதவிகளும் அல்ல..
அவனுக்கு ஏற்படும்
இடையூறுகளும்
துன்பங்களும் தான்
ஒருவனை மனிதனாக
மாற்றும்..!

நீ நடந்து போக பாதை
இல்லை என்று கவலை
கொள்ளாதே..! நீ நடந்து
சென்றால் அதுவே
ஒரு பாதை தான்..!

சந்தோசம் இருக்கும்
இடத்தில் நீ வாழ
நினைப்பதை
விட்டு விட்டு நீ
வாழும் இடத்தில்
சந்தோசத்தை உருவாக்கு
உன் வாழ்க்கை
சந்தோசமாக இருக்கும்.

நல்லவனாக இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சி
செய்யாதே அதை விட
முட்டாள் தனமான
விடயம் வேறு
எதுவும் இல்லை.

இந்த உலகில் தலை விதி
என்று எதுவுமே கிடையாது
எல்லாம் நமக்கு நாமே
உருவாக்கி கொள்வது தான்.

ஒன்றை அடைய
வேண்டுமென்றால்
அதற்காக இறுதி வரை
போராடு.. அதில் ஏற்படும்
தோல்வியை நினைத்து
கவலை கொள்ளாதே
தொடர்ந்து போராடு..!

இந்த உலகில் உன்னை
வேறு யாருடனும் ஒப்பிட்டு
பார்க்காதே அப்படி
செய்தால் உன்னை நீயே
அவமதிப்பதற்கு நிகரானது.

நீ விழுவதெல்லாம்
எழுதவற்காகவே தவிர
அழுவதற்காக இல்லை..!

உனக்கு வெற்றி கிடைக்கும்
போது தான் அறிந்து
கொள்வாய் நீ கண்ட
ஒவ்வொரு தோல்வியும்
உன் வெற்றி என்று..!

உலகில் மிகச் சிறந்த
வைரங்கள் மனிதனிடம்
தோன்றும் நல்ல
சிந்தனைகள் தான்.

ஒரு மனிதனுக்கு அழகான
உருவத்தை விட அழகான
நடத்தையே சிறந்தது.

தனியாக இருக்கிறோம்
என கலங்காதே இனி
உன்னை காயப்படுத்த
யாரும் இல்லை என
எண்ணிக்கொள்.

உலகத்தில் மிகவும்
அழகானவர்கள் அடுத்தவர்கள்
சந்தோசத்தை பார்த்து தாமும்
சந்தோசம் கொள்பவர்கள்.
இவர்கள் உலகில்
அனைத்திற்கும்
தகுதியானவர்கள்..!

நீ கடுமையாக உழைத்தால்
அதற்கான பலன் நிச்சயம்
உன்னை ஒரு நாள் தேடி
வந்தே தீரும் என்பதை
எப்போதும் மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்.

உன் சந்தோசத்தில் கூட
இருந்தவர்களை விட
உன் துன்பத்தில் உனக்கு
தோள் கொடுத்தவர்களை
ஒரு போதும் மறந்து விடாதே..!

தவறான பதிலை விட
மௌனம் எப்போதும் சிறந்தது.
உன் நாக்கை அதிகம்
அடக்க பழகிக் கொள்..!

உன்னை நீ மாற்றிக்
கொள்ளுவது தான் இந்த
உலகத்தை மாற்றுவதற்கான
முதல் வழி.

Comments are closed.