சிறந்த சிந்தனை வரிகள்

மற்றவர்கள் எது சொன்னாலும்
உண்மை என்று உடன
நம்பி விடாதே அது
உனக்கு நெருக்கமானவர்களாக
இருந்தாலும் அதை ஆராய
ஒரு போதும் மறந்து விடாதே.

நீ வெற்றியை தேடி
அலையும் போது
வீண் முயற்சி என்று
சொல்லும் அவர்கள்
தான் நீ வெற்றி
அடைந்தவுடன்
விடா முயற்சி என்று
சொல்லி வாழ்த்துவார்கள்.

உன்னை நீயே
செதுக்கிக் கொள்ள
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
தான் உனக்கு
உளியாக இருக்கும்.

துரோகிகளையும்
துரோகங்களையும்
அடிக்கடி
நினைத்துக் கொள்
அப்படி அடிக்கடி
நினைத்துக் கொண்டால்
தான் நீ இன்னொரு முறை
ஏமாறாமல் இருக்க முடியும்.

வாழ்க்கையில் சேமிப்பை
ஒரு போதும் அலட்சியம்
செய்யாதீர்கள் சேமிப்பை
அலட்சியம் செய்பவர்கள்
தன் வாழ் நாளில் ஒரு
போதும் செழிப்பை
அடைய முடியாது.

தவறு செய்வது இயல்பு
அதே தவறை தொடர்ந்து
செய்வது தான் வாழ்நாளில்
மிகப் பெரிய
தவறாக இருக்கும்.

பிறர் உன்னை தூக்கி
எறியும் சந்தர்ப்பங்களில்
தான் உனக்கான
அடையாளத்தை பதிக்கும்
வாய்ப்பு கிடைக்கின்றது.

வாழ்க்கை எனும்
போர்க்களத்தில்
வெற்றி வாகை சூட
உனக்கு தேவை
துணை அல்ல
துணிச்சல்.

உண்மை எனும்
வெளிச்சம் வெளியே
தெரியும் வரை
அனைவரும்
உத்தமர்கள் தான்.

மரங்களில் பழங்கள்
இருந்தால் தான் பறவைகள்
தேடி வரும் அது போல தான்
பல உறவுகளும் உன்
வாழ்க்கையில் உயர்வு
இருந்தால் தான் உன்னை
தேடி வருவார்கள்.

அடிக்கடி நீ கோபப்பட்டால்
உன் கோபத்திற்கு மரியாதை
இல்லாமல் போய் விடும்.
கோபமே நீ படாவிட்டால்
உனக்கே மரியாதை
இல்லாமல் போய் விடும்.

உன்னை வீழ்த்த
பயன்படுத்தப்படும்
மிகப் பெரிய ஆயுதம்
உன் மனம் தான்.
உன் மனம் தெளிவாக
இருந்தால் உன்னை
ஒருவராலும்
வீழ்த்த முடியாது.

எதிரி எவ்வளவு பெரியது
என்பது முக்கியம் அல்ல
உன் துணிச்சலும்
தன்னம்பிக்கையும்
எவ்வளவு பெரியது
என்பதே முக்கியம்.

என்ன நடந்தாலும்
தன் குறிக்கோளில்
மிகத் தெளிவாக
இருப்பவனுக்கு தான்
இந்த உலகத்தை
வெல்லும் சக்தி
இருக்கிறது.

அழுவதற்கு ஒரு
ஆறுதலும் இல்லாமல்
தனியாக அழுத்து
முடித்த பின்பு வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது.

Comments are closed.