தமிழ் விடுகதைகள்

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்

2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு

8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி

9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்

11. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்

12. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? நாற்காலி

13. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்

14. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய்

15. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு

16. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில்

17. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா

18. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? மயில்

19. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? கோலம்

20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

Comments are closed.