தாயுமானவர் பொன்மொழிகள்

1.கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை.

2. நல்லாருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம்.

3. மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள கடவுளே வழிகாட்ட வேண்டும்.

4. பிறருடைய குறைகளை பற்றி சிந்திக்க வேண்டாம். நல்லதை மட்டுமே எப்போதும் பேசுங்கள்.

5. மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன் நன்மையும் ஏற்படும்.

6. குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.

7. மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.

8. வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய் விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும்.

இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.

9. நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.

பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

10. உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும்.

ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

Comments are closed.