தோழி கவிதை வரிகள்

யாரோ அவளோ தெரியவில்லை..
அன்பை தந்தால் தேவதையாய்
சிரிக்க வைக்கும் அவள் மனதை
வெறுக்க வைத்தேன் வார்த்தைகளால்..
விலகி செல்வேன் பலநேரம்
தேடி வந்தாள் தோழியாக..
இவளை பிரிந்த ஒரு நிமிடம்
பிரிந்து விட்டது என் இதயம்.

நட்புக்கு ஏது ஆண்பால் பெண்பால்
நாம் எப்போதும் நண்பர்கள் தான்.

அவள் வாழும் வாழ்க்கை வேறு
நான் வாழும் வாழ்க்கை வேறு..
காலங்கள் மாறிவிட்டது சூழ்நிலைகள்
பதில் சொல்லிவிட்டது..
ஆனாலும் இறக்கும் வரை
அவள் என் தோழி என்பதை
இருக்கும் வரை
உரைக்காமல் என்னால்
ஒரு நொடியும் இருக்க முடியாது..
என்றும் அவள் தான்
என் உயிர் தோழி.!

அன்பிற்காக ஏங்கிய தருணம்
அழகாய் வந்து முன் நின்றாள்..
தோழியென என் கரம் கோர்த்து
தோல்விகளை தூரம் துரத்தினால்..
காதலுக்கும் நட்புக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தினாள்..
தாயாகவும் தந்தையாகவும் இருந்து
தலைசிறந்த மனிதனாய் மாற்றினாள்..
அப்போது உணர்ந்தேன் தெய்வம்
அவள் வடிவிலே அருகில் இருப்பதை.!

தோழி நீ இருந்தால் போதும்
என்று கூற ஒரு தோழி
இருந்தால் போதும் நம்முள்
ஒரு புது நம்பிக்கை தோன்றி விடும்..
எதையும் எதிர்பார்க்காதவளாய்
தோழியாய் தோழனாய்
தந்தையாய் தாயாய்
நம்மை கடைசிவரை பார்க்கும்
கண்கள் அவளுடையது..
தோழி நீ மட்டும் போதும்
என் வாழ்வில்
நான் வெற்றியை காண..!

தமிழ் பேச தெரிந்த நாள் முதலாய்,
தாய்ப்பாலை நான் மறந்த
நாள் முதலாய்.. என்னோடு
நடைபோட்டு என்னோடு
கைகோர்த்து சென்ற நாள்
முதலாய்..
பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்ட
மற்றொரு தாயவள் என் தோழி..!

Comments are closed.