நட்பு பொன்மொழிகள்

நண்பனின் ரகசியத்தை
வாழ் நாள் வரை
காப்பாற்றுபவனே
நல்ல நண்பன். ஒரு
சிறந்த நட்பு ஒருவனுக்கு
வாழ் நாள் முழுவதும்
கை கொடுக்கும்.

சிறகு கிடைத்தால்
உயர பறப்பது மட்டுமல்
நட்பு. துக்கங்களையும்
ஒன்றாக சுமப்பதும்
நட்பு தான்.

எதிர்பார்த்து உறவாடுகின்ற
உறவுகளுக்கு மத்தியில்
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் உறவாடுவது
நட்பு மட்டுமே.

வாழக்கை வாழ ஒரு
பிறவி போதும் ஆனால்
நல்ல நட்போடு வாழ
பல பிறவி வேண்டும்.

சரியான நேரத்தில் உதவி
செய்பவனே சிறந்த
நட்பின் புரிதல். அந்த
நட்பை எந்த நிலையிலும்
ஒதுக்கி விடாதே.

நண்பர்களிடம் தேவைக்காக
பழகாதே அப்படி பழகும்
நண்பர்களை விட பழி
தீர்க்க துடிக்கும்
எதிரி மேலானவன்.

இதயத்திற்கும் உண்மையான
நல்ல நட்புக்கும் வித்தியாசம்
கிடையாது இரண்டுமே
நமக்காக துடிப்பைவை.

உறவுகள் யாரும் இல்லை
என்று வருந்தாதே. நல்ல
நண்பர்கள் எல்லா
உறவுகளையும் விட
மேலானவர்கள்.

உன் நிழல் இன்றிக் கூட
நீ நடந்தாலும் உன் நல்ல
நண்பர்கள் உன்
கூடவே வருவார்கள்.

நட்பும் ஒரு பொக்கிஷம்
தான் நீ அதற்கு
உண்மையாக
இருக்கும் வரை.

நட்பு என்பது மேகம்
அல்ல நொடிப் பொழுதில்
களைந்து போக. இது
வானம் போன்றது
வாழ் நாள் முழுவதும்
கூடவே இருக்கும்.

உன்னை விழ வைத்தவர்கள்
முன்னே தலை நிமிந்து
எழ வைக்கும் நல்ல நட்பு.

கூடவே பிறக்கவே இல்லை
என்றால் கூட ஒன்றாகவே
துடிக்கும் உண்மையான
நண்பர்கள் வாழ்வில்
கிடைத்த அதிஷ்டம்.

ஆயிரம் உறவுகள் நம்மை
தேடி வரும் ஆனால்
தேடினாலும் கிடைக்காத
பொக்கிஷங்கள்
நல்ல நண்பர்கள்.

Comments are closed.