நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

உலகை மாற்றும்
ஒரே ஆயுதம் கல்வி.

நல்ல தலைமையும்..
நல்ல இதயமும் எப்போதும்
வல்லமை மிக்க
சேர்க்கையாகும்.

கோபம் விஷம் குடிப்பதை
போன்றது. ஆனால்
நம்பிக்கை உங்கள் எதிரிகளையும்
அழிக்கும் வல்லமை மிக்கது.

செய்து முடிக்கும் வரை
செய்ய முடியாது
போல தான் இருக்கும்.

பின்னால் இருந்து கூட்டத்தை
வழிநடத்துங்கள் முன்னால்
செல்பவர்கள் தங்களால் தான்
முன்னேறி நடக்கிறோம்
என்று நம்ப வையுங்கள்.

ஒரு நாட்டின் மக்கள்
கல்வி அறிவு பெறாதவரை..
எந்த நாடும் உண்மையில்
அபிவிருத்தி அடைய முடியாது.

காலத்தின் மதிப்பு
தெரிந்தால் தான்
வாழ்வின் மதிப்பு தெரியும்.

எனது வெற்றிகள் மூலம்
என்னை மதிப்பிடாதீர்கள்..
எத்தனை முறை நான்
கீழே விழுந்து மீண்டும்
மீண்டும் எழுந்தேன்
என்பதன் மூலம்
என்னை மதிப்பிடுங்கள்.

புத்தக வாசிப்பிற்கு
அனுமதித்தால் போதும்
சிறையும் சுதந்திரமான
இடம் தான்.

சூழ்நிலைகள்
அனுமதிக்கும் போது
அகிம்சை ஒரு
நல்ல கொள்கை.

பணத்தால் வெற்றியை
உருவாக்கிட முடியாது.

தண்ணீர் கொதிக்கும் போது
அதன் வெப்பத்தை அணைப்பது
முட்டாள்தனமான செயல்.

உயர்ந்த சிந்தனை உயர்ந்த
மனதில் இருந்தே
தோன்றுகின்றது.

வறுமை தொடரும் போது
உண்மையான விடுதலை
இருப்பதில்லை.

நீங்கள் உங்கள் எதிரியுடன்
அமைதியை ஏற்படுத்த
விரும்பினால் அவருடன்
இணைந்து பணியாற்ற வேண்டும்.
பிறகு அவர் உங்கள்
பங்குதாரர் ஆகிவிடுவார்.

நம் வாழ்வு மற்றும்
செயல்களின் ஒவ்வொரு
விவரத்தையும் திட்டமிட்டு
முயற்சி செய்வதன் மூலம்
குறிப்பிடத்தக்க செயல்முறை
எப்போதும் சாத்தியமாகும்.

ஒருவர் வாழ்வில் தோல்வியே
அடையாததால் உலகப் புகழ்
பெறுவதில்லை. ஒவ்வொரு
தோல்வியிலும் துவளாது
மீண்டும் மீண்டும்
எழுவதில் தான் புகழ்
பெறுகிறார்கள்.

Comments are closed.