பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

1.தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.

2. நான் என்னை வேலைக்கு அர்ப்பணித்து விட்டேன். நான் அதன் அடிமை. நான் பார்க்க நினைக்கிற செய்ய நினைக்கிற பணிகளை பிறருக்கு தருவதில்லை. எனக்கு வேலை செய்ய பிடிக்கும். காலம் முழுவதும் நான் அப்படியே இருக்க நினைக்கிறன்.

3. பசியினால் திருடுகிற ஏழைகளை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அரசிடமிருந்து கோடி கணக்காக திருடுவார்கள் ஒருநாள் கூட சிறைத்தண்டனை அனுபவித்ததில்லை.

4. புரட்சி என்பது ஆண்கள் சார்ந்து மட்டுமல்ல.. பெண்களும் புரட்சியில் பங்கு பெறுவதே உண்மையான புரட்சி.

5. தயங்குறவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.

6. நீ செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.

7. துன்பங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

8. நூலகங்களையும் புத்தகங்களையும் பார்க்கும் போதெல்லாம் என் வாழ்நாள் முழுவதையும் படிப்பதிலும் கற்பதிலும் செலவிட முடியவில்லையே என்று வருந்துகின்றேன்.

9. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மரண போராட்டம் தான் புரட்சி.

10. ஒரு புரட்சியாளன் என்பவன் தனது இலட்சியத்தை ஒளிவு மறைவின்றி தனது பகைவர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

11. நீங்கள் என்னை தண்டியுங்கள் சிறையில் அடையுங்கள் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை ஏனெனில் வரலாறு என்னை விடுதலை செய்யும்.

12. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.

13. ஒரு மனிதனை விலைக்கு வாங்கிவிடலாம் ஆனால் மக்களை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது.

14. என்னுடைய சர்வாதிகாரம் என்பது மக்களை சுரண்டுபவர்களுக்கு எதிரானது.

15. நம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் செயல்கள் தீவிரமாக இருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே இல்லை.

16. உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான்.

17. எங்களுக்கென்று சில பழக்க வழக்கங்கள் உண்டு. அதைக்கொண்டு எங்களை மதிப்பிடுவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் இப்படிதான் இருப்போம்.

Comments are closed.