புத்தரின் பொன்மொழிகள்

ஒரு முட்டாள் நண்பனுடன்
சேர்ந்து வாழ்வதை விட
நீ தனியாக வாழ்வதே
சிறந்தது.

போரில் ஆயிரம்
பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது
உன் மனதை நீ
வெற்றி கொள்வது.

இந்த உலகில்
எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான்
உண்டு.

நம் வாழ்க்கையில்
எதுவுமே நிலையானது
இல்லை என்பதை உணர
ஆரம்பித்து விட்டால்..
நமக்கு இருக்கும் ஆணவம்
காணாமல் போய் விடும்.

அமைதியை விட
உயர்வான சந்தோசம்
இந்த பூமியில் வேறு
ஒன்றும் இல்லை.

தன் எதிரியாக
இருந்தாலும் அவனுக்கும்
நல்லதே நடக்க நினைப்பவன்
தான் நல்ல மனம் படைத்தவன்.
அந்த மனம் கொண்டவனுக்கு
நல்ல விடயங்கள்
தான் நடக்கும்.

உயிர் நண்பன் என்பவன்
தக்க நேரத்தில் சரியான
உதவிகளை செய்பவன்
தான். அந்த நட்பை
விட்டு விடக் கூடாது.

உங்கள் வாழ்நாளில்
எதை செய்தாலும்
திருப்தியுடன் செய்யுங்கள்
அதுவே உங்கள் வாழ்வை
அர்த்தம் உள்ளதாக
மாற்றும்.

வாழ்க்கை என்றாலே
துன்பங்களும் துயரங்களும்
இருக்கத் தான் செய்யும்
அது தான் நியதி என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த நொடியை
சந்தோசமாக வாழுங்கள்
நிகழ்காலத்தை
சந்தோசமாக வாழ்வது
தான் வாழ்க்கையை
இனிமையாக மாற்றும்.

வாழ்வு என்பது
சில நொடியில் முடிந்து
போவதல்ல ஒவ்வொரு
நொடியையும் சந்தோசமாக
திருப்தியாக வாழ்வதாகும்.

மகத்தான வெற்றி
என்பது இந்த உலகத்தை
வெற்றி கொள்வதைக்
காட்டிலும் உன் மனதை
வெற்றி கொள்வதே
மகத்தான வெற்றி.

உண்மைக்கு மகத்தான
சக்தி உண்டு அதை
எவராலும் மாற்றிடவோ..
மறைத்திடவோ.. இயலாது
உண்மையை அழிக்கும்
சக்தி எவருக்கும் இல்லை.

உண்மை என்பது
ஒரு இனிமையான உணர்வு.
உண்மையின் அருமை
தெரியாதவர்கள் இனிமையின்
சுகத்தை உணராதவர்கள்.

உன் வாழ்வில்
உண்மையும் அன்பும்
நிறைந்திருந்தால்
எப்போதும் உன் வாழ்வு
மகிழ்ச்சியாகவே
இருக்கும்.

உணர்வோடு இருப்பதே
போலவே அதீத
உணர்ச்சிகளில் இருந்து
விலகி இருக்கவும்
கற்றுக் கொள்ளுங்கள்.

செல்வத்தின் இயல்பு
வளர்வதும் தேய்வதும்
செல்வம் என்றைக்கும்
ஒரு இடத்தில்
நிலைத்திருப்பது கிடையாது.

நீ செய்த செயல்கள்
ஒவ்வொன்றும் உன்
நிழல் போல உன்னை
தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கும்.
அது நல்லதா
இருந்தாலும் சரி
கெட்டதாக
இருந்தாலும் சரி.

மற்றவர்களிடம் பேசும்
போது உங்கள் மனதில்
இருப்பதை சொல்லுங்கள்
இல்லையென்றால்
மௌனமாக இருங்கள்.

Comments are closed.