பெரியார் பொன்மொழிகள்

 

ஒவ்வொரு மனிதனும் இறந்து
போவது உண்மை தான்..
ஆனால் அவனுடைய
முயற்சிகளும் அவனுடைய
செயல்களும் அவனோடு
இறந்து போவதில்லை.

ஆயிரம் அறிவாளிகளுடன்
மோதுவதை விட சிரமமானது
ஒரு முட்டாளுடன் மோதுவது.

கல்லை கடவுள் என்று கூறும்
மனிதன்.. பார்ப்பவனை
தெய்வம் என்று வணங்குவதில்
எந்தவொரு அதிசயமும் இல்லை.

உன் சலிப்பும்
சோம்பேறித்தனமும்
தற்கொலைக்கு சமம்.

உருவத்தில் மனிதனாகவும்..
செயலில் மிருகமாகவும்..
இருப்பதை விடுத்து
மனித தன்மையுடன்
வாழப்பழகி கொள்ளுங்கள்.

யார் சொல்லி இருந்தாலும்..
எங்கு படித்திருந்தாலும்..
நானே சொல்லி இருந்தாலும்..
உன் அறிவுக்கும்..
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

ஒருவனின் வாழ்வை
அழகுபடுத்துவது அவனின்
அறிவும் மானமும் தான்
இவை இரண்டும்
ஒருவனிடம் எப்போதும்
இருக்க வேண்டும்.

ஒருவனின் மூட நம்பிக்கையும்
குருட்டு பழக்கங்களும் தான்
ஒருவனின் முதல் எதிரிகள்.
இவை இரண்டையும் இல்லாமல்
செய்தால் தான் வாழ்வு சிறக்கும்.

மனிதனின் உயிர் நாடி
என்பது அவனுக்கு
இருக்கும் பகுத்தறிவு தான்..
பகுத்தறிவு இல்லாதவன்
வாழ்ந்து பலனில்லை.

விதியை நம்பி உன்
அறிவை இழந்து விடாதே.

சிறந்த மக்களின்
ஒழுக்கத்தையும்
அறிவையும் கெடுப்பது
இந்த மதுப்பழக்கம்.

ஒரு மனிதன் யாராக
இருந்தாலும் சரி அவன்
தமிழ் பற்றாளனாக
நான் உணர்ந்தாள்
நான் அவனுக்கு
அடிமையாகமாறி விடுவேன்.

மற்ற மனிதர்களிடம் பழகும்
விதத்தையும் ஒழுக்கத்தையும்
ஒருவன் தன் சிறு வயதிலேயே
நன்றாக கற்றுக் கொண்டானால்
அவனே வாழ்க்கையில்
உயர்ந்த மனிதன் ஆவான்.

ஒருவன் தன்னிடம் மற்றவர்கள்
எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்று
அவன் எதிர்பார்க்கின்றானோ
அப்படி எல்லோரிடமும்
அவன் நடந்து கொள்ள வேண்டும்
அதன் பெயர் தான் ஒழுக்கம்.

ஒழுக்க குறைவும்
மூட நம்பிக்கையும்
ஒருவனின் எப்படிப்பட்ட
திறமையையும்
வெளிக்கொண்டு வர விடாது.

சமூக வாழ்வில்
இருப்பவர்களுக்கு
அளவிற்கு மீறிய
நேர்மையும் கட்டுப்பாடும்
உறுதியும் தியாக
உணர்வும்
இருக்க வேண்டும்.

ஒரு நாடு சொர்க்க
பூமியாக மாற
வேண்டுமானால்
அந்நாட்டு மக்கள்
ஒழுக்கமுள்ளவர்களாக
இருப்பது அவசியம்.

 

Comments are closed.