பேச்சு நகைச்சுவைகள்
[001]
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
—————————————————————————————-
[002]
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
—————————————————————————————-
[003]
இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
—————————————————————————————-
[004]
இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?
காணாம பேசாத …அறைக்குள்அடிவாங்குறது நான் தான் ….!
—————————————————————————————-
[005]
பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
இப்பவாவது உணர்ந்தியே!
கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
—————————————————————————————-
[006]
உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.
ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
—————————————————————————————-
[007]
நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?
எப்படி ? உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.
—————————————————————————————-
[008]
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு … வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!”
—————————————————————————————-
[009]
“வக்கீல் சார்… வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது.”
“ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?”
—————————————————————————————-
[010]
எல்லோரும் வீட்டு வாசல்லதான் திருஷ்டிப் பொம்மை வைப்பாங்க, நீங்க பஸ்லேயே வெச்சிருக்கீங்க?
யோவ், அது என் பெண்டாட்டி போட்டோயா..!
—————————————————————————————-
[011]
எதிரி, நம்மை இன்னமும் துரத்திக் கொண்டு இருக்கிறான் மன்னா…!
மூச்சிரைக்கத் துரத்தி விட்டு, வாழில் நுரை தப்ப, கால்கள் சோர்ந்து தோற்றுத் திரும்பப் போகிறான் அவன்…
திரும்பிப்பார்க்காமல் நாம் ஓடுவோம்…!
—————————————————————————————-
[012]
மது ஒழிப்பு பிரச்சாரம் :மதுவை நாம் நாட்ல இருந்து அழிக்கணும் .,
So Daily நான் 2 full wisky குடிச்சு அழிகிறேன்.,
நீங்க Daily 3 Quarter குடிச்சு அழிச்சிடுங்க..
ஏதோ நம்மால முடிஞ்ச சமூக சேவை.
சரக்கு அடிப்போம் மதுவை ஒழிப்போம் ….
#தம்பி நமக்கு நோபல் பரிசு ஏதாவது கிடைக்கிறவாய்ப்பு இருக்கா ?
—————————————————————————————-
[013]
சுவாமி இந்த பூமி ஏன் சுற் றுகின்றது
மகனே கேள் ஒரு குவாட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலை கீ ழா நடக்கும் போது 3 குவாட்டர் தண்ணிய தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சு ற் றுவதில் என்ன அதிசயம் மகனே ??
சுவாமி குவாட்டர் கோவிந்தசாமி
—————————————————————————————-
[014]
Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”
Friend 1 ”கடிக்க….ஏதாவது?”
Friend 2 ”நாய் இருக்கு… அவுத்துவிடவா?”
#Nanbendaaaaaaaaaaaaa………..
—————————————————————————————-
[015]
வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்
1.காலை சாப்பாடு
2. மதிய சாப்பாடு
3.இரவு சாப்பாடு.
—————————————————————————————-
[016]
ஒவ்வொரு மனிதர்களுமே ஆச்சரியமானவர்கள் தான்….
உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்..
உங்களுக்கு ஒரு பெற்றோர், அதாவது இரண்டு பேர்….
அந்த இரண்டு பேருக்கும் அப்பா, அம்மா உண்டு…
அப்படியே போய்க்கொண்டிருந்தால்… ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட 500 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்றால் உங்களை உருவாக்கியவர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா…………………………?
1,48,576 பேர். இந்த வரிசையில் ஏதாவது ஒரு ஜோடி மிஸ் பண்ணியிருந்தால் கூட நான் உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்”
—————————————————————————————-
[017]
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . . . . . .
—————————————————————————————-
[018]
காதலி : டார்லிங் இன்னைக்கு sunday வாங்க
ஹோட்டெல போய் சாப்பிட்டு வருவம்…ஆனால்
நான் தான் கார் ஓட்டுவேன் ….?
காதலன் : என்னோட தலைவிதி கார்ல போயிட்டு ஆம்புலன்சில வரோணும் எண்டு ….
—————————————————————————————-
[019]
டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
—————————————————————————————-
[020]
பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்க ளே… அதான் கேட்டேன்.!”
—————————————————————————————-
[021]
பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?
ஆண்: ஆமா!
பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?
ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…
பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?
ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.
பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?
ஆண்: சரிதான்…
பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….
ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?
பெண்: ச்சே ச்சே நோ நோ…!
ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
பெண்: _________________________________
—————————————————————————————-
[022]
“அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.” “எப்படி சொல்றீங்க?”
“வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.”
—————————————————————————————-
[023]
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை
—————————————————————————————-
[024]
பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தாஅவளுக்கு பாய் பிரெண்ட் இருக்கான்னுஅர்த்தம்..
பையன் மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் இல்லைன்னு அர்த்தம்…
—————————————————————————————-
[025]
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!
காதலி: ஆமாம் அன்பே..
காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?
காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..
[026]
லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:
”இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.”
அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:
இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.
—————————————————————————————-
[027]
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.
மாணவன் ஒருவன் சொன்னான்,”ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.”
—————————————————————————————-
[028]
தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?
முழிச்சிருப்பாங்க
—————————————————————————————-
[029]
ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .
ஒரு அஞ்சு நிமிஷம் இரு… இப்ப நான் சாப்பிடப் போறேன்… பார்த்துட்டுப் போய்டு
—————————————————————————————-
[030]
நீதிபதி : உன்னை மாதிரி ஆளுங்களாலே இந்தச் சமுதாயத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை.
குற்றவாளி : இப்படி சொல்லிட்டீங்களே,ஐயா!! என்னை மாதிரி ஆளுங்களாலேதான் இங்க இருக்கும் ஏட்டய்யா, வக்கீலுங்க, இந்தக் கோர்ட்டில் இருக்கும் எல்லோருக்கும், ஏன் உங்களுக்குக் கூட வேலை கிடைச்சிருக்கு.
—————————————————————————————-
[031]
நம்ம அப்பா முட்டாளாம்மா?”
“எதுக்குடா இப்படி கேகிறே?”
“எங்க வாத்தியார் என்னை
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே”
—————————————————————————————-
[032]
அப்பா : என்னடா உங்க அம்மா இன்னைக்கி ரொம்ப அமைதியா
இருக்குறா..?
மகன் : அது ஒன்னுமில்ல Dad.. அம்மா Lipstick கேட்டாங்களா.. நா தெரியாம Fevistick எடுத்து குடுத்துட்டேன் அதான்.
அப்பா : Ohhh… Sweeettt My Son.