பொங்கல் கவிதைகள்
கோலப் போட்டியில்
உன் முகத்திற்குத்தான்
முதல் பரிசு.
உன்னை வரைந்த
உன் அம்மாவை
வந்து வாங்கிக் கொள்ளச் சொல்!
★☆★☆★☆★☆★☆★☆★
நீ
பொங்கலோ பொங்கல்
என
சத்தமிடுவதை
பார்த்து
அழகோ அழகு
என
கூவிக் கொண்டிருக்கிறது மனசு.
★☆★☆★☆★☆★☆★☆★
கரும்பும் சர்க்கரை பொங்கலும்
தேவையில்லை…
நீ
கொஞ்ச நேரம்
பேசிக் கொண்டிருந்தால் போதும்,
பொங்கலே இனிக்கும்.
★☆★☆★☆★☆★☆★☆★
நீ
சூரியனுக்கு
பொங்கல் வைத்தாய்,
இரவில்
நிலவும், நட்சத்திரங்களும்
வானில் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.