மகிழ்ச்சி பொன்மொழிகள்

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக
வையுங்கள்.. கிடைக்கும்
இடத்தில் பெற்றுக்கொண்டு..
கிடைக்காத இடத்தில்
கொடுத்து விட்டு செல்வோம்..!

மகிழ்ச்சி என்பது பெறுவதில்
இல்லை.. பிறருக்கு கொடுப்பதில்
தான் இருக்கிறது..!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது
பிறரை மகிழ வைப்பதில்
தான் இருக்கிறது..!

பிறக்கும் போதே யாரும்
மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்
கொள்ள நீயே முயற்சி செய்..!

ஒரு செயலை செய்வது வெற்றி
அல்ல.. அதை மகிழ்ச்சியாக
செய்வதே வெற்றி.. எதையும்
சிறு புன்னகையுடன்
எதிர்கொள்ளுங்கள்..!

கவலைகள் எங்கிருந்து வரும்
என்று தெரியாது.. ஆனால்
மகிழ்ச்சியும் புன்னகையும்
நம்மிடம் தான் இருக்கிறது..!

மகிழ்ச்சி என்பது நமக்குள்
விளைவது.. மற்றவர்களிடத்தில்
அதை தேட வேண்டியதில்லை..!

மகிழ்ச்சியை தேடிக்கொண்டே
இருந்தால்.. நிம்மதியை கூட
இழந்து விடுவோம்.. வாழ்க்கையை
அப்படியே ஏற்றுக் கொள்ள
கற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சி
தானே தேடி வரும்..!

Comments are closed.