மனித மிருகங்கள்

பிணம் தின்னும் கழுகுகளும்.. வெறிகொண்ட மிருகங்களும்..
மனிதன் என்ற பெயரில் இங்கு நடமாடுது ..

அது பூத்துக்குலுங்க வேண்டிய பிஞ்சு மொட்டுக்களை,
நசுக்கி கசக்கி எரிகின்றது …

மூன்று வயது குழந்தையும் ,ஆறு வயது சிறுமியும் ..
தனக்கு நடப்பது என்னவென்று தெரியாமல் தவிக்கின்றது …

வேட்டையாடும் மிருகங்களின்,
கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு,
தப்பிக்க வழியின்றி திகைக்கின்றது ..

காக்கவேண்டிய கடவுளும் கல்லாகி போனதால் ..
மீட்க வேண்டியவர்களும் முடமாகி போனதால் ..

சாதிக்கப் பிறந்த சாதனை செல்வங்கள்
மண்ணாகி போகின்றன ..!!

Comments are closed.