மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்

உன்னை வெற்றி கொள்ள
யாரும் பிறக்கவில்லை
என்று நினைக்காதே..
எல்லோரையும் வெற்றி கொள்ள
நீ பிறந்திருக்கிறாய்
என நினைத்துக்கொள்..
வெற்றி உன் பக்கம்.

ஒரு வீரனுக்கான முதல் தகுதி..
சோர்விலும் பொறுமையாக
இருப்பது..
தைரியம் என்பது
இரண்டாவது தகுதியே.

இரவில் உங்கள் உடைகளை
தூக்கி எறியும்போது
உங்கள் கவலைகளையும்
தூக்கி எறிந்து விடுங்கள்.

குழந்தைகளின் எதிர்காலம்
எப்போதும் தாயின்
செயலில் தான் தங்கியிருக்கிறது.

இறக்கும் நேரத்தை விட
துன்பப்படும் நேரத்திலேயே
நமக்கு அதிக தைரியம்
தேவைப்படுகிறது.

நீங்கள் ஒரு செயலலை
சிறப்பாக செய்ய விரும்பினால்
அதை நீங்களே செய்யுங்கள்.

நமது உடலுக்கு தேவைப்படும்
சிறந்த சிகிச்சை
அமைதியான மனமே.

வெற்றி கிடைக்குமோ என்ற
ஐயம் நிச்சயம் தோல்வியை
நோக்கியே கொண்டு செல்லும்.

நட்புக்கு உயிரைக் கொடுப்பது
இலகுவானது ஆனால் உயிரைக்
கொடுப்பதற்கு தகுதியான
நட்பு கிடைப்பது அரிது.

நாம் நமது தேவைகளை மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறோமே
தவிர.. நமது திறன்களைப் பற்றி
ஒருபோதும் சிந்திப்பதில்லை.

கற்பனை வளமே
இந்த உலகை ஆள்கின்றது.

Comments are closed.