விடுகதைகள்

1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?

– [கனவு]

2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் – அது என்ன?

– [நத்தை]

3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?

– [அடுப்பு]

4. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் – அது என்ன?

– [குடை]

5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?

– [தவளை]
6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?

– [பூட்டு]

7. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?

– [மழை]

8. முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?

– [துடைப்பம்]

9. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?

– [கதவு]
10. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?

– [நாக்கு]
11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?

– [வேர்க்கடலை]

12. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?

– [மின்மினிப் பூச்சி]

13. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?

– [பம்பரம்]

14. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?

– [வாழைப்பழம்]

15. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?

– [கத்தரிக்கோல்]

Comments are closed.