விவேகானந்தர் பொன்மொழிகள்

உங்கள் முயற்சியில்
ஆயிரம் முறை
தோல்விகளை சந்தித்தாலும்
மீண்டும் ஒரு முறை முயற்சி
செய்வதற்கு சிறிதும்
தாமதிக்காதீர்கள்.

மனிதன் வலிமை
மிக்கவனாக மாற
வேண்டுமானால் அவன்
உண்மையுடன்
வாழ வேண்டும்.

கடுமையாக உழைக்க
பழகிக் கொண்டால்
உங்கள் இலக்குகளை
எளிதில்
அடைய முடியும்.

வாழ்க்கையில் இல்லை
என்று ஒரு போதும்
சொல்லாதீர்கள்…
என்னால் முடியாது
என்று ஒரு போதும்
எண்ணி விடாதீர்கள்
இந்த உலகில்
உங்களுக்கு எதையும்
சாதிக்கும் சக்தி
இருக்கின்றது.

நீ எல்லை அற்ற
வலிமை உடையவன்
உன் வலிமையுடன்
ஒப்பிடும் பொழுது
இந்த உலகில்
உன்னால் செய்ய
முடியாத விடயம்
என்று ஒன்றும்
இல்லை.

மற்றவர்களின்
பேச்சிற்கு காது
கொடுங்கள்…
எல்லாவற்றையும்
ஆராய்ந்து பாருங்கள்..
ஆனால் உங்கள்
முடிவில் எப்போதும்
உறுதியாக இருந்து
கொள்ளுங்கள்.

தன்னையே மறந்து
ஒருவன் ஒரு செயலில்
ஈடுபடும் பொழுது தான்
அவனால் சிறப்பான
சாதனைகளை
உருவாக்க முடியும்.

இந்த உலகில்
உன்னை தவிர வேறு
யாராலும் உனக்கான
சந்தோசத்தை சிறப்பாக
கொடுக்க முடியாது.

ஒருவனிடம் அவனில்
இருக்கும் குற்றங்களை
பார்ப்பதை விட
அவனிடம் இருக்கும்
நல்ல குணங்களை
காண்பது தான்
உயர்ந்த குணம்.

உன்னில் இருக்கும்
தன்னம்பிக்கையை
இழப்பது உன்னை நீ
இழப்பதற்கு நிகரானது.
தன்னம்பிக்கையை
இழப்பது உயிர் இல்லாமல்
வாழ்வதை போன்றது.

கத்தி முனையில்
நடந்தாலும் நம்பிக்கையை
இழந்து விடாதே… கடினமாக
இருந்தாலும் மனம்
தளர்ந்து விடாதே… நீ
அடைய வேண்டிய
லட்சியத்தில் குறியாக இரு.

அன்புடன் நீ
மற்றவர்களுக்கு செய்யும்
ஒவ்வொரு செயலும்
எண்ணிலடங்காத
சந்தோசத்தை கொண்டு
வந்தே தீரும்.

நீ செய்த தவறுகளை
வாழ்த்த மறந்து
விடாதே அவை தான்
உன்னை வழிகாட்டும்
வழிகாட்டியாக
இருக்கின்றன.

நீ எப்போதும்
உற்சாகமாக இருப்பது
தான் வாழ்க்கையை
வெற்றிகரமாக
மாற்றுவதற்கான
ரகசியம்.

என்னால் எதையும்
சாதிக்க முடியும்..
என்னால் செய்ய
முடியாது என்று
எதுவும் இல்ல.. நீ
மன உறுதி
நிறைந்தவனாக
இருந்தால் பாம்பின்
கொடிய விஷம் கூட
உன்னிடம் சக்தி
இல்லாமல் போய் விடும்.

உன் உடல்
பலத்தையோ… உன்
மன பலத்தையோ
குறைக்கும் எதையும்
நீ அணுகாமல் இரு.

கருணை உள்ள
மனம்.. சிந்திக்கும்
ஆற்றல் கொண்ட
மூளை.. உழைக்கும்
தன்மை கொண்ட
கைகள்.. ஆகியவை
கட்டாயம் மனிதனிடம்
இருக்க வேண்டிய
பண்புகள்.

உண்மைக்காக எதையும்
இழக்கலாம் ஆனால்
எதற்காகவும்
உண்மையை
இழக்க கூடாது.

உனக்கு ஏற்படும்
துக்கம் என்பது உன்
அறியாமையின்
காரணத்தால் தான்
ஏற்படுகின்றது.. உன்
அறியாமையில் இருந்து
நீ விழித்துக் கொண்டால்
உன் துக்கங்களை நீ
தவிர்த்துக் கொள்ளலாம்.

பொய் சொல்லி
மற்றவர்களை ஏமாற்றும்
ஏமாற்றுக்காரர்கள் மற்ற
ஏமாற்றுக்காரர்களால்
ஒரு நாள் நிச்சயம்
ஏமாற்றப்படுவார்கள்.

Comments are closed.