வெற்றிக்கான தன்னம்பிக்கை வரிகள்

முடியும் வரை முயற்சி
செய்யுங்கள், உங்களால்
முடியும் வரை அல்ல
நீங்கள் நினைத்த காரியம்
முடியும் வரை முயற்சி
செய்யுங்கள்.

இப்பொழுது எங்கே
நிக்கிறீர்கள் என்பதை
விட எதிர்காலத்தில் எங்கே
போக போகிறீர்கள் என்பது
தான் முக்கியம். உங்கள்
எதிர்காலத்திற்காக
தன்னம்பிக்கையுடன்
முயற்சி செய்யுங்கள்.

வாழ்க்கையில் அதிசயங்கள்
எப்போது வேண்டுமானாலும்
நிகழலாம் ஆனால்
உங்களுக்கான அதிசயம்
உங்கள் முயற்சியால்
உருவாகும். உங்கள்
வாழ்க்கையை செதுக்கும்
சிற்பி நீங்கள் தான்.

துன்பங்கள் உங்களை வந்து
சேரும் போது எப்போதும்
ஒவ்வொரு துன்பத்திலும்
உங்களுக்கான வெற்றிக்கான
விதையை விதையுங்கள்.

நீங்கள் வாழ்க்கையில் தடுக்கி
விழ பல கால்கள் இருக்கலாம்…
ஆனால் ஊன்றி எழ ஒரு கை
உள்ளது என்பதை மறந்து
விடாதீர்கள் அது தான்
“நம்பிக்கை”.

உங்களுக்கு தேவையான
எல்லா வலிமையையும்,
உதவியும் உங்களுக்குள்ளே
இருக்கின்றன. நம்பிக்கையுடன்
முயற்சி செய்யுங்கள்.

முடிந்த பிரச்சினைகளை
நினைத்து கவலை
அடைவதை நிறுத்தி விட்டு
வரும் காலத்தை துணிந்து
தன்னம்பிக்கையுடன்
எதிர்த்து நில்லுங்கள்.

கடினமாக உழைத்தவர்கள்
எல்லாம் முன்னேறி விடவில்லை.
கவனமாகவும் நம்பிக்கையுடனும்
உழைத்தவர்களே வாழ்க்கையில்
முன்னேறி உள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும் தளராத
உள்ளம் கொண்டவனுக்கு
இந்த உலகில் முடியாது என்று
எந்த விடயமும் இல்லை.

சோதனைகளை சாதனையாக்க
முயல்பவனுக்கே வேதனைகளும்
போதனைகளாக அமையும்.
சோதனைகளை கண்டு
பயந்து துவண்டு விடாமல்
அடுத்த அடியை
எடுத்து வையுங்கள்.

Comments are closed.