வெளிநாட்டு வாழ்க்கை கவிதை

உழைக்க வேண்டிய வயசு
இதுதான் என்று விமானம்
ஏறி வந்தோம்.. வாழ வேண்டிய
வயதும் இதுதான்
என்பதை மறந்து..!

வெளிநாடு என்பது ஒரு
வினோதமான சிறைச்சாலை
அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்.. வெளியே
இருப்பவன் உள்ளே
வர துடிக்கிறான்..!

வெளிநாட்டில் சம்பாதிக்கும்
குடும்பங்களே ஆடம்பரத்தை
குறைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் செலவு செய்வது
பணம் அல்ல.. சம்பாதிப்பவரின்
வயதை..!

என்னை வளர்த்த பெற்றோரின்
கடைசி காலத்திலும் இல்லாமல்..
நான் பெத்த பிள்ளை வளரும்
தருணத்திலும் அருகில்
இல்லாமல்..
என்ன வாழ்க்கை இது..!

வெளிநாட்டு வாழ்க்கை
ஒரு மெழுகுவர்த்தி போல தான்..
தூரத்தில் இருந்து பார்த்தால்
ஒளி மட்டும் தெரியும் அருகில்
சென்று பாருங்கள் அவர்கள்
உருகி கண்ணீர்
வடிப்பது தெரியும்..!

ஓடி ஓடி உழைத்தாலும்..
கையும் காலும் விறைத்தாலும்
அன்பாக பேச யாருமில்லை..
காசு என்பது நிற்கவில்லை..
கடன் தொல்லை தீரவில்லை..
சொன்னாலும் யாரும்
நம்பவில்லை..!

உழைக்க வேண்டிய வயது
என விமானம் ஏறி வந்து..
வாழ வேண்டிய வயதை
தொலைத்து நிற்பதே
இந்த வெளிநாட்டு வாழ்க்கை..!

உலகில் உள்ள வேதனைகளின்
மொத்த உருவம் தான் இந்த
வெளிநாட்டு வாழ்க்கை..!

பிறந்த குழந்தைக்கு ஒரு வயது
ஆன பின்னும் அப்பாவை பார்
என்று அறிமுகம் செய்யும்
அவலம் எங்களுக்கு
மட்டும் தான்..!

வெளிநாட்டு வாழ்க்கை
தலையணையை சரி செய்து
சுகமாய் தூங்கிய நாட்களை விட..
சோகம் நிறைந்த அசதியில்
தூங்கிய நாட்கள் தான் அதிகம்..!

வாழ்க்கை எனும் பயணத்தில்
வேலை தேடி வெளிநாடு
செல்லும்.. நமக்கு
நெருக்கமானவர்களின் பயணம்
நம் கல் மனதையும்
கரையைச் செய்கின்றது..!

யாரும் இல்லாமல் கூட
நிம்மதியாக வாழ்ந்து விடலாம்..
ஆனால் எல்லோரும் இருந்தும்
அனாதையாக வாழ்வதே
கொடுமை நிறைந்த வாழ்க்கை..!

உனக்கென்ன.. விமானப்பயணம்..
வெளிநாட்டு ராஜ வாழ்க்கை
என்று ஊருக்கு போனதும்
உள்ளூர் வாசிகள் எங்களை
பார்த்து விடும் பெருமூச்சு
வளைகுடா நாட்டின்
அரபு நாட்டு வெப்பத்தை விட
சற்று அதிகமாகவே சுடுகிறது..!

கல்யாணம் முடிந்த பிறகு
விடுமுறை முடிந்து..
வெளிநாடு போகும் தருணம்
என் கருவை சுமக்கும்
மனைவியையும் சேர்த்து.. என்
நெஞ்சில் சுமந்து கொண்டு தான்
விமானம் ஏறுகின்றேன்..!

வறுமைக்காக அயல்நாடு சென்று
பணத்தை சேமிப்பதும்..
விடுமுறைக்கு தாய் நாடு வந்து
நினைவுகளை சேமிப்பதுமே
வெளிநாட்டு வாழ்க்கை..!

உள்நாட்டில் அடுப்பு எரிய
வெளிநாட்டில் விறகாய் எரியும்
வாழ்க்கை.. இதுதான்
வெளிநாட்டு வாழ்க்கை..!

விசாவிற்கு பணத்தைக் கட்டி..
காதலுக்கு சமாதி கட்டி..
இளமைக்கு பூட்டு போட்டு..
தொடர்கிறது வெளிநாட்டு
பயணம்..!

Comments are closed.